வீரேந்திர ஷேவாக்கை முடித்து வைத்தது போன்று என்னையும் முடித்துவிட வேண்டாம் என அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Ashwin #MSDohin
தமிழ்நாடு பிரிமியர் லீக் சீசன் 3ல் பங்கேற்கும் திண்டுக்கல் டிராகன் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் அந்த அணியின் அணித்தலைவர் அஸ்வின் கலந்து கொண்டார்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது:-
சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாததற்கு ஒரு தமிழனாக வருந்துகிறேன். எனக்கும், டோனிக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை, சகவீரர்களில் அவரும் ஒருவர். ஷேவாக்- டோனி இடையே பனிப்போர் என கூறி ஷேவாக்கை முடித்தது போன்று என்னையும் முடித்துவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் ஐபிஎல் 2019-க்கான போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்!