கிரிக்கெட்

6 டெஸ்ட் அல்லது 12 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை: பந்தை சேதப்படுத்தும் வீரருக்கு தண்டனை அதிகரிப்பு ஐ.சி.சி. ஒப்புதல் + "||" + For the player to damage the ball Penalty increase ICC Approval

6 டெஸ்ட் அல்லது 12 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை: பந்தை சேதப்படுத்தும் வீரருக்கு தண்டனை அதிகரிப்பு ஐ.சி.சி. ஒப்புதல்

6 டெஸ்ட் அல்லது 12 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை: பந்தை சேதப்படுத்தும் வீரருக்கு தண்டனை அதிகரிப்பு ஐ.சி.சி. ஒப்புதல்
களத்தில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்திய விவகாரங்கள் சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பெரும் தலைவலியாக உருவெடுத்தது.

துபாய்,

களத்தில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்திய விவகாரங்கள் சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பெரும் தலைவலியாக உருவெடுத்தது. கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் காகிதம் போன்ற பொருளை கொண்டு பந்தை சேதப்படுத்தியது அம்பலமானது. அவர்கள் மீது ஐ.சி.சி. மேற்கொண்ட நடவடிக்கை சாதாரணமாக இருந்தாலும், ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் ஓராண்டு தடை நடவடிக்கைக்குள்ளாகி இருக்கிறார்கள். கடந்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார்.

பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு அபராதத்துடன் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாட தடை விதிப்பது போதாது, அதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது குறித்து அயர்லாந்தின் டப்ளின் நகரில் 5 நாட்கள் நடந்த ஐ.சி.சி. ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் பந்தின் தன்மையை மாற்றும் வீரருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்குவதற்கு ஐ.சி.சி. ஒப்புதல் வழங்கியது.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கும் வீரர் மீது ஐ.சி.சி. நடத்தை விதி லெவல் 2–கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வந்தது. இனி அது லெவல்–3க்கு செல்கிறது. முன்பு லெவல்3–ன் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும் வீரருக்கு 8 தகுதிஇழப்பு புள்ளி வழங்கப்படும். அது 12 தகுதி புள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பந்தின் தன்மையை மாற்றும் மோசடி வீரர்களுக்கு 6 டெஸ்ட் போட்டி வரையோ அல்லது 12 ஒரு நாள் போட்டிகள் வரையோ விளையாட தடை விதிக்கப்படும். இதே போல் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் வீரர் அதற்கு என்று தனியாக கட்டணம் செலுத்தும் முறையையும் ஐ.சி.சி. அறிமுகப்படுத்துகிறது. அப்பீல் வெற்றிகரமாக அமைந்தால் செலுத்தப்படும் தொகை திரும்ப வழங்கப்படும்.தொடர்புடைய செய்திகள்

1. பான்பராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
புதுவையில் சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்தனர்.
3. ராமேசுவரம் தீவு பகுதியில் மது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் - டிராபிக் ராமசாமி பேட்டி
ராமேசுவரம் தீவு பகுதியில் மது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.
4. திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ல விதித்த தடை நீடிப்பு
திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் செல்ல விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. ஆசிய விளையாட்டில் சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு ஆண்டு தடை
ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் ஒரு இரவு தங்கி உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது.