கிரிக்கெட்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் + "||" + Triangular 20 Oversight Cricket: Pakistan in final

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்
ஹராரே நகரில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 4–வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஜிம்பாப்வே அணிகள் மோதின.

ஹராரே,

ஹராரே நகரில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 4–வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சலோமோன் மிரே 94 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஹார் ஜமான் 47 ரன்களும், ஹூசைன் தலாத் 44 ரன்களும் விளாசினர். 2–வது வெற்றியை சுவைத்த பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை உறுதி செய்தது. 3–வது தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஆஸ்திரேலிய அணிகள் மீண்டும் சந்திக்கின்றன.