கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்பு + "||" + England cricket match Junior Super Kings team participation

இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்பு

இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்பு
இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷைர் கிரிக்கெட் அகாடமி சார்பில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

சென்னை,

இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷைர் கிரிக்கெட் அகாடமி சார்பில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்கிறது. இதில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்தில் இருந்து தலா ஒரு ஜூனியர் அணிகள் கலந்து கொள்கின்றன. ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணியில் 16 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 4 பேர் மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். மற்றவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டு செல்கிறது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார்.