கிரிக்கெட்

வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி + "||" + Test match against Bangladesh West Indies are a great success

வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

வங்காள தேசத்துக்கு  எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
வங்காள தேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆன்டிகுவா

வங்காள தேச கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவா நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய வங்காள தேசம்  முதல் இன்னிங்ஸில் 18.4 ஓவர்களில் வெறும் 43 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 406 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் அபார சதமடித்தார். அவர் 121 ரன்களும் சாய் ஹோப் 67 ரன்களும், டிவோன் ஸ்மித் 58 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் அறிமுக வீரர் அபு ஜெயத், மெஹிடி தலா 3 விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்காள தேச அணி, வெஸ்ட் இண்டீஸின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை மளமளவென இழந்தது. அந்த அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. மகமத்துல்லா 15 ரன்களுடனும் நுருல் ஹசன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில்  மகமத்துல்லா மேலும் ரன் ஏதும் சேர்க்காமல் அவுட் ஆனார். நுருல் ஹசன் தாக்குப் பிடித்து 64 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்தவர்கள் நிலையாக நிற்காததால், 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது . இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.