கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் + "||" + TNPL Cricket match: Ticket sales start today

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11–ந் தேதி முதல் ஆகஸ்டு 12–ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது.

நெல்லை,

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11–ந் தேதி முதல் ஆகஸ்டு 12–ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி டி.என்.பி.எல். போட்டியின் மீடியா மேலாளர் டாக்டர் பாபா, கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், இந்த்ராஜித், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விசுவநாதன் ஆகியோர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

வருகிற 11–ந்தேதி தொடங்கும் 3–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்க உள்ளன. மாலை 3.15 மணி, இரவு 7.15 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் முதல் சீசனில் 8 ஆட்டங்களும், 2–வது சீசனில் 13 போட்டிகளும் நடந்தன. தற்போது 14 போட்டிகள் நடத்தப்படுகிறது.

நெல்லையில் 11–ந் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டை போன்றே ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
2. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்.
4. இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி 425 ரன்கள் குவிப்பு கார்னிவர் சதம் அடித்தார்
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தியது, நியூசிலாந்து மார்ட்டின் கப்தில் சதம் அடித்தார்
நியூசிலாந்து–வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...