கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி எடுத்த அதிரடி முடிவு + "||" + Watch: Mohammed Shami's estranged wife Hasin Jahan turns up the heat in sultry photo-shoot

கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி எடுத்த அதிரடி முடிவு

கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி எடுத்த அதிரடி முடிவு
இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். #MohammedShami #HasinJahan
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான்  பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

 மேலும்  முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் கூறி இருந்தார்.  இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஷமியும், ஹசினும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மாடலிங் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஹசின் தெரிவித்துள்ளார்.

மாடலிங் துறையில் வாய்ப்புகளை அள்ளுவதற்காக, டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள மிகக் கவர்ச்சியான வீடியோ ஒன்று, பல இளைஞர்களை சுண்டி இழுத்தாலும், முகமது சமியின் ரசிகர்களுக்கு ஆத்திரத்தையே ஏற்படுத்தியுள்ளது.