டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது திண்டுக்கல்


டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது திண்டுக்கல்
x
தினத்தந்தி 11 July 2018 4:06 PM GMT (Updated: 11 July 2018 4:06 PM GMT)

திருச்சி அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக திண்டுக்கல் அணி நிர்ணையித்துள்ளது. #TNPL

நெல்லை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமின்றி கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு நல்லதொரு அடித்தளம் அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில்,  அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், பாபா இந்திரஜித் தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் அணி நிர்ணையிக்கப்பட்ட 20  ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது.  திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக ராமலிங்கம் ரோகித் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 46 ரன்கள் சேர்த்தார்.  இதையடுத்து, 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது. 

Next Story