கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு + "||" + India vs England, Live Score 1st ODI: Virat Kohli Wins Toss, Opts To Field Against England

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. #INDvsENG

நாட்டிங்காம்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் இங்கிலாந்து அணியை பேட் செய்யுமாறு பணித்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  20 ஓவர் தொடரில் அசத்திய இந்திய வீரர்கள், ஒரு நாள் தொடரிலும் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பலம் வாய்ந்த இரு அணிகள், பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் கோதாவில் இறங்கி இருப்பது,  ரசிகர்களுக்கு ரன்விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்: - 
இந்தியா, 

ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகெஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்) சுரேஷ் ரெய்னா, எம்.எஸ் தோனி (கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், 

இங்கிலாந்து,

ஜேசன் ராய், ஜான்னி பெர்ஸ்டவ் ,ஜோ ரூட், இயான் மார்கன் (கேப்டன்), பென்ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கீப்பர்), மோயின் அலி, டேவிட் வில்லி, லியாம் பிளங்கட், அடில் ரஷித், மார்க் வூட்,