கிரிக்கெட்

6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய சாதனை படைத்த குல்தீப் யாதவ் + "||" + India vs England: Kuldeep Yadav Becomes First Left Arm Spinner To Take 6 Wickets In An ODI

6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய சாதனை படைத்த குல்தீப் யாதவ்

6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய  சாதனை படைத்த குல்தீப் யாதவ்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். #KuldeepYadav
நாட்டிங்ஹாம், 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று நாட்டிங்காமில் நடைபெற்றது. 

இப்போட்டியில், இந்திய அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீர பிராட் ஹாக் 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல் - பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு
ரபேல் ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல் என சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியுள்ளார்.
2. ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மோதுகின்றன.
3. ரபேல் விவகாரம்: முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து குறித்து பிரான்சு அரசு விளக்கம்
ரபேல் ஒப்பந்த பிரச்சினையில் பிரான்சு முன்னாள் அதிபர் ஹோலண்டே கருத்து குறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
4. இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி - மழையால் ரத்து
இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
5. ஆசிய கோப்பை கிரிக்கெட் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 174 ரன்களை வங்கதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.