கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 287 ரன்னில் ஆல்-அவுட் + "||" + Test against South Africa Sri Lanka team All out of 287 runs

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 287 ரன்னில் ஆல்-அவுட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 287 ரன்னில் ஆல்-அவுட்
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது.
காலே,

இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்களில் 287 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 8-வது சதத்தை நிறைவு செய்த தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே 222 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 158 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், ஷம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேரம் முடிவில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.