கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் மதுரை-திண்டுக்கல் அணிகள் இன்று மோதல் + "||" + TNPL. Cricket Madurai Dindakal teams Confrontation today

டி.என்.பி.எல். கிரிக்கெட் மதுரை-திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் மதுரை-திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
நெல்லை,

தொடக்க லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நெல்லையில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.