கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் கார்த்திக் - முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு + "||" + Dinesh Karthik may stay back in England for Tests

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் கார்த்திக் - முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் கார்த்திக் - முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் முகமது சமி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. #DineshKarthick
மும்பை,

இங்கிலாந்து அணியுடன் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட லண்டன் சென்றிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 இருபது ஓவர் போட்டியிலும், 1 ஒரு நாள் போட்டியிலும் விளையாடியுள்ளது. இதில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, அடுத்து நடைபெற இருக்கும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணி இடம் பெற அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் விக்கெட் கீப்பர் சகாவின் உடல் நிலை இன்னும் தகுதி பெறவில்லை. அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கு எதிரான நிதாஷ் டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடினார். மேலும் ஐபிஎல் போட்டியிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தினார். எனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கட்டைவிரல் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக முகமது சமி அணியில் இடம் பிடிப்பர் என எதிர்பாக்கப்படுகிறது.