கிரிக்கெட்

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இங்கிலாந்து + "||" + Root leads charge with maiden ton at Lord's

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இங்கிலாந்து

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இங்கிலாந்து
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 323 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணையித்தது. #INDvsENG
லண்டன்,


இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று  நடைபெற்று வருகிறது.  ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்  நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கை 

தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.  இந்தப்போட்டியில், தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், மிகவும் நேர்த்தியான துவக்கத்தை இங்கிலாந்து பெற்றது. அதேவேளையில், ரன்ரேட்டையும் கவனத்தில் கொண்டு சீரான வேகத்தில் அடித்து ஆடியது. 

துவக்க ஆட்டக்காரர்கள் ராய் (40 ரன்கள்), பெர்ஸ்டவ் (38 ரன்கள்), சராசரியான துவக்கத்தை அளித்தனர். இருந்த போதிலும், மூன்றாம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஜோ ரூட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் இயான் மோர்கன் 53 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக பேட்டை சுழற்றிய டேவிட் வில்லி 31  பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 113 ரன்கள் எடுத்து இருந்தார். 

இங்கிலாந்து அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்புடைய செய்திகள்

1. துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு அடிப்படை வசதி - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி
புதுவை கிரிக்கெட் மைதானத்திற்கு சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி அளித்துள்ளார்.
2. ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு
ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.
4. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.
5. ஐதராபாத் டெஸ்ட்: இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்ப்பு
ஐதராபாத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.