கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி + "||" + 2nd ODI: Pakistan win the match against Zimbabwe

2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி
2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. #PAKVsZIM
புலவாயோ,

5  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி 49.2 ஓவரில் 194 ரன்களில் ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணியின் சார்பில் கேப்டன் ஹாமில்டன் மசகட்சா 59 ரன்களும், பீட்டர் மூர் 50 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஹசன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.


195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் பஹார் சமானின் அபார ஆட்டத்தால் 36 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 195 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பஹார் சமான் 117* ரன்களும், இமாம் உல் ஹக் 44 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது.