இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய  சாதனை
x
தினத்தந்தி 18 July 2018 3:33 AM GMT (Updated: 18 July 2018 3:33 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். #Viratkohli

லீட்ஸ்,

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் வென்றது. முன்னதாக, இந்திய அணி பேட் செய்யும் போது 3-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். 

கேப்டனாக விராட் கோலியின் 52-வது போட்டி இதுவாகும். இதில் 49 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். விராட் கோலி 14 ரன் அடித்திருக்கும்போது கேப்டன் பதவியில் இருந்து விரைவாக 3000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்  தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 60 இன்னிங்சில் இந்த சாதனையை செய்திருந்தார். 

தோனி 70 -இன்னிங்சிலும், கங்குலி 74 -இன்னிங்சிலும், கிரேம் ஸ்மித் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் 83- இன்னி்ங்சிலும், ஜெயசூர்யா மற்றும் ரிக்கி பாண்டிங் 84 -இன்னிங்சிலும் 3000 ரன்களை கடந்துள்ளனர்.

Next Story