கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா? தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள் + "||" + MS Dhoni Takes ODI Match Ball From Umpire, Sparks Conjectures About Retirement

சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா? தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா? தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தோனி திட்டமிட்டுள்ளாரா? என்ற சந்தேகத்தை அவரது ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். #MSDhoni
லீட்ஸ், 

இந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்வியால், ரசிகர்கள் சோகம் அடைந்துள்ள நிலையில், நேற்றைய போட்டி முடிந்த பிறகு, வீரர்கள் பெவிலியன் திரும்பிக்கொண்டு இருந்த போது,  இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி, ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்தை, நடுவரிடம் இருந்து பெற்றுச் சென்றார். தோனியின் செயல்,  கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தமான ஆட்டத்தால், ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளான தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரா? என்ற சந்தேகத்தை டுவிட்டரில் ரசிகர்கள் முன்வைத்து உள்ளனர்.

 தோனியின் ரசிகர்கள் பலர், இந்திய அணி தடுமாறிக்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், தோனி ஓய்வு பெறுவது நல்லதல்ல.. என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி திடீர் அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் உலகை அதிரச்செய்தது நினைவிருக்கலாம்.