கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு + "||" + One Day Cricket Batsman rankings Viratkoli Extrusion in the top

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு
ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது.

துபாய், 

ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்ற இங்கிலாந்து அணி (127 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி (121 புள்ளிகள்) 2–வது இடத்தில் தொடருகிறது. தென்ஆப்பிரிக்கா (113 புள்ளிகள்) 3–வது இடமும், நியூசிலாந்து (112 புள்ளிகள்) 4–வது இடமும், பாகிஸ்தான் (103 புள்ளிகள்) 5–வது இடமும், ஆஸ்திரேலியா (100 புள்ளிகள்) 6–வது இடமும், வங்காளதேசம் (93 புள்ளிகள்) 7–வது இடமும் வகிக்கின்றன.

பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (911 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் 2 சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோரூட் (818 புள்ளிகள்) 4 இடம் முன்னேறி முதல்முறையாக 2–வது இடத்தை பிடித்துள்ளார். பாபர் அசாம் (பாகிஸ்தான்), ரோகித் சர்மா (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) ஆகியோர் ஒரு இடம் சரிந்து முறையே 3 முதல் 6 இடங்களை பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஷிகர் தவான் 10–வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (775 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (763 புள்ளிகள்) 2–வது இடமும், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி (750 புள்ளிகள்) 3–வது இடமும், நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (699 புள்ளிகள்) 4–வது இடமும், ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (696 புள்ளிகள்) 5–வது இடமும் வகிக்கின்றனர். இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் (684 புள்ளிகள்) 6–வது இடத்தையும், யுஸ்வேந்திர சாஹல் (666 புள்ளிகள்) 10–வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆல்–ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச வீரர் ‌ஷகிப் அல்–ஹசன் (360 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.



தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.
2. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
5. தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்? கவாஸ்கர் அதிரடி கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–