கிரிக்கெட்

டி.என்.பி.எல்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது காரைக்குடி காளை அணி + "||" + Karaikudi Kaalai won by 47 runs

டி.என்.பி.எல்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது காரைக்குடி காளை அணி

டி.என்.பி.எல்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது காரைக்குடி காளை அணி
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது. #TNPL
சென்னை,

3வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 10-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளை அணியை எதிர்கொண்டது.

இந்நிலையில் டாஸ் வென்ற காரைக்குடி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதித்யா மற்றும் அனிருத்தா விளையாடினர்.இதில் ஆதித்யா ஒரு பவுண்டரியுடன் 10 ரன்களில் வெளியேறினார்.
்அவருடன் இணைந்து விளையாடிய அனிருத்தா 56 (28 பந்துகள், 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.

இந்த போட்டியில் பவ்னா 31 (23), சூர்ய பிரகாஷ் 7(10) மற்றும் சீனிவாசன் 19(20) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  6வது நபராக விளையாடிய ஷாஜகான் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்துள்ளார்.  அவருடன் விளையாடிய ராஜ்குமார் 8(2) ரன்கள் எடுத்துள்ளார்.  ஷாஜகான் மற்றும் ராஜ்குமார் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ, சன்னி குமார் சிங் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, கேப்டன் கோபிநாத்துடன் உத்திரசாமி சசிதேவ் கை கோர்த்தார். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டு அணியின் ரன்வேகத்தை உயர்த்தினர். 

இதனிடையே 9-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 73 ஆக இருக்க சசிதேவ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கேப்டன் கோபிநாத்தும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பின்னர் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் ரன்களை குவிக்க தவறியதால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது. முருகன் அஸ்வின் 33 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காரைக்குடி காளை அணி சார்பாக மகேஷ், மோகன் ப்ரசாத், ராஜ்குமார், லக்‌ஷ்மன், பாஃப்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.