கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர் + "||" + Kuldeep will be influential in Test cricket - Tendulkar

டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்
இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்தின் ஜோ ரூட் திறம்பட கையாண்டார்.
ங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆகஸ்டு 1-ந்தேதி தொடக்கம்) விளையாட உள்ள நிலையில் அது குறித்து இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்தின் ஜோ ரூட் திறம்பட கையாண்டார். அவரது மணிக்கட்டு சுழற்சியை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப விளையாடினார். அவரை போல் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் குல்தீப்பின் சுழலை சமாளிக்க முடியும் என்று நினைக்கவில்லை. பெரும்பாலான வீரர்கள் நிச்சயம் தடுமாறுவார்கள். ஆடுகளம் வெயிலால் நன்கு காயும் போது குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏதுவாக உலர்ந்து காணப்பட்டால் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்தால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர். அவர் காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய பின்னடைவாகும்’ என்றார்.