கிரிக்கெட்

விராட் கோலி பொய் சொல்கிறார்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சொல்கிறார் + "||" + Virat Kohli Is Lying If He Says His Runs Won't Matter: James Anderson

விராட் கோலி பொய் சொல்கிறார்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சொல்கிறார்

விராட் கோலி பொய் சொல்கிறார்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சொல்கிறார்
விராட் கோலி பொய் சொல்கிறார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்து உள்ளார். #Viratkohli
புதுடெல்லி,

இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் தனது ரன்கள் ஒரு பொருட்டல்ல என்று விராட் கோலி கூறுவாரேயானால், அவர் பொய் சொல்கிறார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்து உள்ளார்.  இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளாரான ஆண்டர்சன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ என்னுடைய சொந்த ரன்கள் எனக்கு முக்கியம் இல்லை என்று விராட் கோலி சொல்வாரேயானால், அவர் பொய் சொல்கிறார். இந்தியா இங்கு வெற்றி பெற வேண்டுமெனில் விராட் கோலி ரன்கள் எடுத்தாக வேண்டும். மேலும் அவர் நிச்சயம் ரன்கள் எடுத்து தன் கடந்த கால இங்கிலாந்து நினைவுகளை அகற்றவே விரும்புவார், மேலும் உலகின் சிறந்த பேட்ஸ்மென், கேப்டன் ரன் எடுக்கவே முயற்சி செய்வார், ஆடுவார் என்பதில் ஐயமில்லை.

இப்போதைய பேட்ஸ்மென்கள் தங்கள் செய்த தவறுகளை வீடியோ பதிவில் பார்த்துச் சரி செய்து கொள்கின்றனர், நிச்சயம் விராட் கோலியும் கடந்த தொடரில் செய்த தவறை திரும்பச் செய்யக் கூடாது என்பதில் கவனமாகவே இருப்பார்.அவர் நிச்சயம் தன் பேட்டிங்கின் சில பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் இதனால் எனக்கு மட்டுமல்ல மற்ற பவுலர்களுக்கும் அவருக்குமிடையேயான போராட்டம் சுவாரசியமானதாக இருக்கும்.

ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகியோரை ஒப்பிடமுடியாது ஒவ்வொருவரும்  தனித்துவமானவர்கள், மேலும் இவர்கள் இருபது ஓவர் போட்டிகளில் 20 பந்துகளில் 50 ரன்கள் அடிப்பார்கள், டெஸ்ட் போட்டியில் 250 பந்துகளில் 100 அடிப்பார்கள். இவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் இவர்களில் ஒருவரை சிறந்தவர் என்று குறிப்பிடுவது கடினம். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், இவர்களுக்கு பந்து வீசுவதை நான் விரும்புவதில்லை” என்றார்