வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
x
தினத்தந்தி 23 July 2018 10:27 PM GMT (Updated: 23 July 2018 10:27 PM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது.


கயானா,

வங்காளதேச கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை வெஸ்ட்இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. 10-வது சதம் அடித்த தமிம் இக்பால் 160 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 130 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 2-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பால்-ஷகிப் அல்-ஹசன் (97 ரன்கள்) இணை 207 ரன்கள் திரட்டியது.

பின்னர் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேச அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிம்ரோன் ஹெட்மயர் 52 ரன்னும், கிறிஸ் கெய்ல் 40 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச அணி தரப்பில் மோர்தசா 4 விக்கெட்டும், முஸ்தாபிஜூர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் நாளை நடக்கிறது.

Next Story