கிரிக்கெட்

டோனியை பின்பற்ற நினைத்து பல்ப் வாங்கிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் + "||" + Watch: Sarfraz Ahmed tries to pull off a MS Dhoni but fails; here's what happened

டோனியை பின்பற்ற நினைத்து பல்ப் வாங்கிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்

டோனியை பின்பற்ற நினைத்து பல்ப் வாங்கிய பாகிஸ்தான்  கேப்டன்  சர்ப்ராஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான சர்ப்ராஸ் டோனியின் ஸ்டைலை பின்பற்ற நினைத்து அசிங்கப்பட்டுள்ளார். #SarfrazAhmed #MSDhoni
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். அவரது கேப்டன்சியில் அந்த அணி மீண்டும் வலுவான நிலைக்கு திரும்பிவருகிறது. இவர் இந்திய அணியின் முன்னாள் தலைவரான டோனியை அனைத்து வகையிலும் பின்பற்றி வருகிறார். டோனியைப் போலவே விக்கெட் கீப்பர் மற்றும் தலைவராக சர்பராஸ், தோனியை பின்பற்ற விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் டோனியை போல முதன்முதலில் பந்துவீசிய போட்டியில் விக்கெட் வீழ்த்த தவறிவிட்டார். ஜிம்பாப்வே இன்னிங்ஸின் 48 மற்றும் 50 ஆகிய இரண்டு ஓவர்களை வீசி 15 ரன்கள் கொடுத்தார். சர்பராஸ் பவுலிங்கை ஜிம்பாப்வே வீரர் சிக்ஸர் விளாசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேவையில்லாமல் டோனியை பின்பற்ற நினைத்து அசிங்கப்பட்டுவிட்டீர்களே என்று டோனியின் ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.