கிரிக்கெட்

ஜார்க்கண்டில் அதிக வருமான வரி செலுத்துபவர் பட்டியலில் டோனி முதலிடம், ரூ.12.17 கோடி கட்டுவதாக தகவல் + "||" + Dhoni highest income tax payer in Jharkhand

ஜார்க்கண்டில் அதிக வருமான வரி செலுத்துபவர் பட்டியலில் டோனி முதலிடம், ரூ.12.17 கோடி கட்டுவதாக தகவல்

ஜார்க்கண்டில் அதிக வருமான வரி செலுத்துபவர் பட்டியலில் டோனி முதலிடம், ரூ.12.17 கோடி கட்டுவதாக தகவல்
ஜார்க்கண்டில் அதிக வருமான வரி செலுத்துபவர் பட்டியலில் டோனி முதலிடத்தில் உள்ளார். #Dhoni
ராஞ்சி,

2017-18 நிதி ஆண்டில், வருமான வரியாக ரூ.12.17 கோடி வருமான வரியாக இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி செலுத்தியுள்ளார் என்று ஜார்கண்ட் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஜார்க்கண்டில் அதிக வருமான வரி செலுத்தும் தனி நபராக டோனி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில், டோனி ரூ.10.93 கோடியை வருமான வரியாக செலுத்தி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது. 

கிரிக்கெட்டில் மட்டும் அல்லாது, பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் உள்ள டோனி, கோடி, கோடியாக வருவாயை ஈட்டி வருகிறார்.  பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த 37 வயதான டோனி போர்பஸ் வெளியிட்ட அதிக வருமானத்தை ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிகம் வாசிக்கப்பட்டவை