இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி: ரஷித் சேர்ப்புக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அதிருப்தி கருத்து


இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி: ரஷித் சேர்ப்புக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அதிருப்தி கருத்து
x
தினத்தந்தி 27 July 2018 9:34 AM GMT (Updated: 27 July 2018 9:34 AM GMT)

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் சேர்க்கப்பட்டிருப்பது முட்டாள்தனமானது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். #MichealVaughan

லண்டன், 

சொந்த மண்ணில், இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார். 

சிவப்பு நிற பந்துகளில் விளையாடுவதை தவிர்த்து குறுகிய வடிவிலான போட்டிகளில் மட்டும் தற்போது கவனம் செலுத்துவதாக அவர் கூறி வந்த நிலையில், திடீரென டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அடில் ரஷித் சேர்க்கப்பட்டதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில், 

”உள்ளூரில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாத ஒருவரை நாம் அணியில் தேர்வு செய்துள்ளோம். அவர் சிறப்பாக விளையாடுவாரா? இல்லையா? என்பதை விட்டுத்தள்ளுவோம். ஆனால் இந்த முடிவானது முட்டாள்தனமானது. இந்த முடிவை நான் கேலியாக தான் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்

Next Story