கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி இன்று மோதல் + "||" + TNPL Cricket chepauk super gillies Thoothukudi is in conflict today

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி இன்று மோதல்
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை சந்திக்கிறது.
சென்னை,

கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஒருங்கிணைந்த ஆட்டம் இதுவரை கைகொடுக்காததால் அந்த அணி தடுமாறி வருகிறது. இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட 150 ரன்களை எட்டாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கணிசமான ஸ்கோரை குவித்தால் தான் வெற்றி கணக்கை தொடங்க முடியும். அத்துடன் எக்ஸ்டிரா வகையில் அதிக ரன்கள் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். கவுசிக் காந்தி தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதல் 2 லீக் ஆட்டத்தில் வெற்றி கண்டது. அடுத்த 2 லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 4 முறையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீட்கப்பட்ட 19 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீட்கப்பட்ட 19 மீனவர்கள் நேற்று அதிகாலையில் பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர்.
2. கனமழை காரணமாக நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக நெல்லை , தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
3. பாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்
பாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
4. தூத்துக்குடியில் போலீஸ் தேர்வுக்கு உடற்கூறு தகுதி தேர்வு தொடங்கியது
தூத்துக்குடியில் நேற்று போலீஸ் தேர்வுக்கான உடற்கூறு தகுதி தேர்வு தொடங்கியது. தேர்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
5. ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரம் - தமிழக அரசு தாக்கல்
ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. #Sterlite