கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் + "||" + Chepauk Super Gillies have won the toss and have opted to bat

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தூத்துக்குடிக்கு பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது
சென்னை,

டி.என்.பி.எல்  கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் துத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி துத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்து வீசி வருகிறது. 

கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது. இருப்பினும், எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று ரசிகர்களை மகிழ்விக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முனைப்பு காட்டும் என தெரிகிறது. அதேவேளையில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் கடந்த இரு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியுற்றதால், இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் எனவே இன்று நடைபெறும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 4 முறையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்”
டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது. #TNPL2018
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் கோவை கிங்ஸ் வெற்றி 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளையை அடக்கிய கோவை கிங்ஸ் அணி இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்-மதுரை, கோவை-காரைக்குடி அணிகள் இன்று மோத உள்ளன.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல்-மதுரை அணிகள் இன்று மோத உள்ளன.
5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018