கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் + "||" + Chepauk Super Gillies won by 13 runs

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. #TNPL
நத்தம், 

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் களமிறங்கினர். 

அணியின் ஸ்கோர் 28 ஆக இருக்கும் போது, கங்கா ஸ்ரீதர் ராஜூ 5 ரன்களில் திவாகர் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோபிநாத், கார்த்திக்குடன் கை கோர்த்தார். மிகவும் சிறப்பாக ஆடிய இந்த ஜோடி காஞ்சி வீரன்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்நிலையில் கேப்டன் கோபிநாத் 31 ரன்களில் வெளியேற, சிறிது நேரத்தில் கார்த்திக் (76 ரன்கள்) மற்றும் உத்திரசாமி சசிதேவ் (11 ரன்கள்) அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இதன் பின்னர் களமிறங்கிய ஹரிஷ் குமாரும் 3 ரன்களில் நடையை கட்ட, முருகன் அஸ்வின் 4 சிக்ஸர்கள் விளாசி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. முருகன் அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். காஞ்சி வீரன்ஸ் அணி தரப்பில் பாபா அபராஜித் 2 விக்கெட்டுகளும், சுனில் சாம், திவாகர் மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா மற்றும் அருண் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி 53 ரன்களில் சம்ரூத் பாட் பந்து வீச்சில் பிரிந்தது. விஷால் வைத்யா (24 ரன்கள்) சம்ரூத் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த சில வினாடிகளிலேயே அருண் 27 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். கடைசி வரை வெற்றிக்கு போராடிய காஞ்சி வீரன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. சேப்பாக் அணி தரப்பில் சிவகுமார், முருகன் அஸ்வின், சம்ரூத் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ஹரிஷ் குமார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.