கிரிக்கெட்

ஜனவரி, பிப்ரவரி மாதத்தில்நியூசிலாந்துக்கு செல்கிறது இந்திய அணி + "||" + January and February Goes to New Zealand Indian team

ஜனவரி, பிப்ரவரி மாதத்தில்நியூசிலாந்துக்கு செல்கிறது இந்திய அணி

ஜனவரி, பிப்ரவரி மாதத்தில்நியூசிலாந்துக்கு செல்கிறது இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது.
ஆக்லாந்து, 

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதனை அடுத்து இந்திய அணி, அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

இதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் ஜனவரி 23-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி மவுண்ட்மாங்கானுவில் ஜனவரி 26-ந் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி மவுண்ட்மாங்கானுவில் ஜனவரி 28-ந் தேதியும், 4-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் ஜனவரி 31-ந் தேதியும், 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 3-ந் தேதியும் நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 6-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் பிப்ரவரி 8-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹமில்டனில் பிப்ரவரி 10-ந் தேதியும் நடக்கிறது.

இதே சமயத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும், நியூசிலாந்து சென்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.