கிரிக்கெட்

சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான டோனி மனைவி வெளியிட்ட புகைப்படம்! + "||" + Troll Alert! MSD’s wife Sakshi Dhoni gets trolled for wearing ‘inappropriate’ dress

சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான டோனி மனைவி வெளியிட்ட புகைப்படம்!

சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான டோனி மனைவி வெளியிட்ட புகைப்படம்!
கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாக்ஷி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் வலுக்க தொடங்கியுள்ளது. #Sakshi_Dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டோனியின் மனைவி சாக்ஷி மாடலிங்கில் விருப்பம் உள்ளவர். அவர் புது காஸ்ட்யூம் அணிந்தபடி, சில  புகைப்படங்கள் எடுத்து, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் அவர் சற்று கவர்ச்சியாக உள்ளார்.  . இந்த போட்டோவை குறிவைத்து பலர் காரசாரமான கருத்துகளை பதிவிட தொடங்கியுள்ளனர். 

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நீங்கள் இப்படி அரைகுறை ஆடை அணியலாமா?, என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும்சிலர், ‘’பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்கள், அரைகுறை ஆடை அணிவது மிகவும் அருவெறுப்பாக உள்ளது,’’எனக் கூறியுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் சாக்ஷி அழகாகத்தான்உள்ளார். அவரை பற்றி வதந்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றும், சிறு கிறுக்கர்கள் பேசுவதை பற்றி நீங்கள்கவலைப்படாதீர்கள் மேடம்‘’ என்றும் சில ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

சமீபகாலமாக, இன்ஸ்டாகிராமில் பிரபலங்களை குறிவைத்து, சிலர் வேண்டுமென்றே விமர்சனங்களை தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, பரினீதி சோப்ரா, டாப்ஸி பன்னு, ஈஷா குப்தா, மல்லிகா ஷெராவத் போன்ற பலர் இவ்வாறுபுகைப்படங்கள் வெளியிட்டதற்கு, கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர்.