இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 1 Aug 2018 10:17 AM GMT (Updated: 1 Aug 2018 10:17 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. #ENGvIND

பர்மிங்காம் ,

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .

இதில் முதல்டெஸ்ட் போட்டி  பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின்.


Next Story