2–வது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவிடம் பணிந்தது இலங்கை


2–வது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவிடம் பணிந்தது இலங்கை
x
தினத்தந்தி 1 Aug 2018 10:00 PM GMT (Updated: 1 Aug 2018 9:09 PM GMT)

இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

தம்புல்லா,

இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2–வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (69 ரன்), கேப்டன் மேத்யூஸ் (79 ரன்) அரைசதம் அடித்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலக்வாயோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 87 ரன்களும் (78 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் பிளிஸ்சிஸ் 49 ரன்களும், அம்லா 43 ரன்களும் விளாசினர்.

வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது ஆட்டம் வருகிற 5–ந்தேதி கண்டியில் நடக்கிறது.


Next Story