‘சரிவில் இருந்து மீள்வோம்’ தூத்துக்குடி வீரர் தினேஷ் பேட்டி


‘சரிவில் இருந்து மீள்வோம்’ தூத்துக்குடி வீரர் தினேஷ் பேட்டி
x
தினத்தந்தி 2 Aug 2018 9:30 PM GMT (Updated: 2 Aug 2018 8:14 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நத்தத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தியது.

நத்தம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நத்தத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தியது. இதில் தூத்துக்குடி அணி நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை திருச்சி அணி 19 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

தூத்துக்குடி அணி இதுவரை 6 புள்ளிகள் (3 வெற்றி, 3 தோல்வி) பெற்றுள்ள நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எஸ்.தினேஷ் அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக ஆடினோம். ஆனால் கடைசி கட்டத்தில் (கடைசி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 25 ரன்கள் மட்டுமே எடுத்தனர்) அதிரடியாக ரன் எடுக்க தவறி விட்டோம். திருச்சியின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. அதிக ரன்கள் குவிப்பதற்கு ஏதுவான இந்த மைதானத்தில் இந்த ஸ்கோர் குறைவு தான். இன்னும் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். கடைசி லீக்கில் (காரைக்குடி காளைக்கு எதிராக) வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை எதிர்நோக்கி உள்ளோம். நிச்சயம் சரிவில் இருந்து மீள்வோம்’ என்றார்.


Next Story