கிரிக்கெட்

இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது தமிழில் பேசி அஸ்வினை ஊக்கப்படுத்திய தினேஷ் கார்த்திக் + "||" + When England captain bat Speaking in Tamil Ashvin encouraged Dinesh Karthik

இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது தமிழில் பேசி அஸ்வினை ஊக்கப்படுத்திய தினேஷ் கார்த்திக்

இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது தமிழில் பேசி அஸ்வினை ஊக்கப்படுத்திய தினேஷ் கார்த்திக்
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், அஸ்வின், முரளிவிஜய் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பர்மிங்காம்,

பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் முரளிவிஜய் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அஸ்வின் வீசிய ஒரு பந்தில் தடுமாறினார். இதை கவனித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ‘நல்லாயிருக்கு அஸ்வின்....போடு மாமா....போடு மாமா...அடுத்த 3 பந்தையும் அப்படியே போடு மாமா. என்ன பண்றான்னு பார்க்கலாம் ’’என்று அஸ்வினை நோக்கி தமிழில் உரக்க கத்தினார். அவரது பேச்சு ஸ்டம்பில் உள்ள மைக் மூலம் தெளிவாக கேட்க முடிந்தது.

களத்தில் நின்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு புரியக்கூடாது என்பதற்காக தினேஷ் கார்த்திக் இவ்வாறு தாய்மொழியில் பேசியுள்ளார். அதே சமயம் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோருக்கும் தினேஷ் கார்த்திக்கின் அழகிய தமிழ் உரையாடல் புரியாமல் விழித்தனர். தினேஷ் கார்த்திக்கின் தமிழ் பேச்சு சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 4–வது முறையாக ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை பந்தாடியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடி மகுடம் சூடியது.
2. இலங்கைக்கு எதிரான 3–வது டெஸ்ட்: வெற்றிப்பாதையில் இங்கிலாந்து
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
3. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்–அவுட்
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டு இந்தியா வெளியேறியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.
5. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு பேர்ஸ்டோ சதம் அடித்தார்
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது.