கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி + "||" + England team to lose 7 wickets for 96 runs

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 96 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. #IndVSEng
பர்மிங்காம்,

இந்தியா-இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 1-ந் தேதி பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ரன்களை குவிக்க தடுமாறியது. கேப்டன் விராட் கோலியை (149 ரன்கள்) தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 274 ரன்களை சேர்த்தது.

13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 14 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜென்னிங்ஸ் அஸ்வின் சுழலில் கேட்ச் ஆகி 8 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஜோய் ரூட்டும் அதே போல் அஸ்வின் சுழலில் ராகுலிடம் கேட்ச் ஆகி வெளியேற சொந்த மண்ணில் ரன்களை சேர்க்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. இதனிடையே இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விஸ்வரூபம் எடுக்க இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். மதிய உணவு இடைவேளையின் போது வெறும் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணி, இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இதனிடையே மதிய உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில், பட்லரும் இஷாந்த சர்மா பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினார். 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 109 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.