கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் வெளிநாட்டு போட்டியில் விளையாடி சர்ச்சையில் சிக்கிய இந்திய ஜூனியர் வீரர் + "||" + Playing in foreign competition Indian junior player in trouble

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் வெளிநாட்டு போட்டியில் விளையாடி சர்ச்சையில் சிக்கிய இந்திய ஜூனியர் வீரர்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் வெளிநாட்டு போட்டியில் விளையாடி சர்ச்சையில் சிக்கிய இந்திய ஜூனியர் வீரர்
சமீபத்தில் இலங்கையில் நடந்த 4 நாட்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) அணியின் கேப்டனாக டெல்லியை சேர்ந்த அனுஜ் ரவாத் செயல்பட்டார்.

புதுடெல்லி,

சமீபத்தில் இலங்கையில் நடந்த 4 நாட்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) அணியின் கேப்டனாக டெல்லியை சேர்ந்த அனுஜ் ரவாத் செயல்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொரிஷியஸ் நாட்டில் நடந்த 20 ஓவர் லீக் போட்டியில் அனுஜ் ரவாத் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் விளையாடியது தற்போது தெரியவந்துள்ளது. அவர் விளையாடிய காட்சி யூடியூப்பில் வெளியானதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த போட்டி தொடரில் விளையாட இந்திய வீரர் மனோஜ் கல்ரா அனுமதி கேட்டு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அனுஜ் ரவாத் மட்டுமின்றி மேலும் சில இந்திய வீரர்களும் அனுமதியின்றி இந்த போட்டியில் பங்கேற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘ஜூனியர் வீரர்கள் எங்களை மீறி அனுமதி இல்லாமல் வெளிநாட்டு தொடரில் விளையாடி இருப்பது துரதிருஷ்டவசமானது. இது மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய வி‌ஷயமாகும்’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.
2. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
5. தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்? கவாஸ்கர் அதிரடி கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–