கிரிக்கெட்

வெற்றிபெறுமா இந்திய அணி? - வெற்றிக்கு 84 ரன்கள் தேவை + "||" + Winning Indian team? - We need 84 runs for victory

வெற்றிபெறுமா இந்திய அணி? - வெற்றிக்கு 84 ரன்கள் தேவை

வெற்றிபெறுமா இந்திய அணி? - வெற்றிக்கு 84 ரன்கள் தேவை
இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படும் நிலையில் இந்திய அணி நிதான ஆட்டத்தினை வெளிபடுத்தி வருகிறது. #INDVsENG
பர்மிங்காம்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 80 ரன்னும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட்கோலியின் (149 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜென்னிங்ஸ், கேப்டன் ஜோரூட் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரிவர சோபிக்காத நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை. விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் இரண்டு விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் குரான் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

ஆட்டம் நிறைவு பெற இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.



தொடர்புடைய செய்திகள்

1. ‘டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ - விராட் கோலி கருத்து
‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
2. ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 6-வது வெற்றி
ஆஸ்திரேலியாவில் 45-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணிக்கு இது 6-வது வெற்றியாகும்.
3. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன?
இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
4. உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா? - பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை
உலக கோப்பை ஆக்கி போட்டியில் 2-வது வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி இன்று பெல்ஜியத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
5. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்த முறை வெல்லாவிட்டால் எப்போதும் முடியாது - டீன் ஜோன்ஸ் சொல்கிறார்
தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல முடியாமல் போனால் அதன் பிறகு எப்போதுமே முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.