கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோக்ஸ், மலான் நீக்கம் + "||" + 2nd test against India: From the England team Stokes, removal of Malan

இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோக்ஸ், மலான் நீக்கம்

இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோக்ஸ், மலான் நீக்கம்
இந்தியாவுக்கு எதிராக வருகிற 9–ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் 2–வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

லண்டன்,

இந்தியாவுக்கு எதிராக வருகிற 9–ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் 2–வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதலாவது டெஸ்டில் பேட்டிங்கில் சோபிக்க தவறிய டேவிட் மலான் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மதுபான விடுதியில் வாலிபரை தாக்கிய வழக்கு விசாரணையை ஆல்–ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் 20 வயதான ஆலி போப் மற்றும் ஆல்–ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். 2–வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:– அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், சாம் குர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாமி போர்ட்டர்.



தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.
2. இங்கிலாந்து - இலங்கை ஒரு நாள் போட்டி மழையால் ரத்து
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
3. இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
4. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணியில் இருந்து மேத்யூஸ் நீக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.
5. இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்
இங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.