இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஜஸ்பிரித் பும்ரா ஆடமாட்டார்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஜஸ்பிரித் பும்ரா ஆடமாட்டார்
x
தினத்தந்தி 7 Aug 2018 9:45 PM GMT (Updated: 7 Aug 2018 7:03 PM GMT)

கடந்த ஜூன் மாதம் நடந்த அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பீல்டிங் செய்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

லண்டன்,

இதற்காக சிகிச்சை பெற்று தேறி வந்த ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். உடல் தகுதியை பொறுத்து இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடும் லெவன் அணி தேர்வில் ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் கருத்தில் கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

தற்போது வலைப்பயிற்சியில் பந்து வீசி வரும் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நேற்று அளித்த பேட்டியில், ‘தற்போது ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசுவதற்குரிய உடல் தகுதியுடன் தான் இருக்கிறார். இருப்பினும் அவரை அவசரப்பட்டு களம் இறக்க விரும்பவில்லை.

எனவே 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணி தேர்வில் ஜஸ்பிரித் பும்ரா பெயர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story