கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், என்னை கொன்றாலும் கொன்றிருப்பார் - முன்னாள் ராணுவ வீரர் + "||" + Cricketer Ben Stokes He killed me Former soldier

கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், என்னை கொன்றாலும் கொன்றிருப்பார் - முன்னாள் ராணுவ வீரர்

கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், என்னை கொன்றாலும் கொன்றிருப்பார் - முன்னாள் ராணுவ வீரர்
கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், என்னை கொன்றாலும் கொன்றிருக்கலாம் என்று அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கூறியுள்ளார்.
லண்டன்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அன்று இரவு நைட் கிளப் ஒன்றுக்கு சென்றார் பென் ஸ்டோக்ஸ். அங்கு ரியான் ஹாலே, ரியான் அலி ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஹாலே முன்னாள் ராணுவ வீரர். தகராறு முற்றி ஸ்டோக்ஸ் அவர்களை கடுமையாக தாக்கினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வருகிறது. இதனால் இங்கிலாந்து அணியில் இருந்து விலகியுள்ள ஸ்டோக்ஸ், நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். விசாரணையின்போது, நைட்கிளப்பில் இருந்து ஸ்டோக்ஸ், 12.46 மணிக்கு வெளியே வந்து விட்டு பிறகு தனது நண்பர் ஹேல்ஸுடன் மீண்டும் கிளப்பிற்கு சென்றுள்ளார். அப்போது கிளப் மூடப்பட்டதால் உள்ளே அனுமதிககப்பட வில்லை. அப்போது அங்கிருந்த இருவரை ஸ்டோக்ஸ் கிண்டலாக பேசினாராம். இதை அலியும், ரியான் ஹாலே வும் எதிர்த்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டோக்ஸ் அவர்களை தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்தது.

போலீஸாரிடம் ரியான் ஹாலே அளித்த சாட்சியம், நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அதில், அந்த நேரத்தில் ஸ்டோக்ஸ் என்னை கொன்றாலும் கொன்றிருப்பார் என்று கூறியுள்ளார். 

நான் ஒரு குழந்தைக்கு தந்தை. என்னை கொன்றாலும் கொன்றிருப்பார். எப்படி விட்டார் என்று தெரிய வில்லை. தவறே செய்யாதவர்கள் மீது சிலர் இப்படி செய்வது அதிர்ச்சியாக இருந்தது என்றார். இதையடுத்து ஹாலே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ், நான் செய்தது அனைத்தும் தற்காப்புக்காகத்தான். தாக்க வேண்டும் என்று செய்யவில்லை. சம்பவம் நடந்த போது நான் குடிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டோனி அணியில் மீண்டும் இடம் பிடிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் -மொகிந்தர் அமர்நாத்
இந்திய அணியில் டோனி மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியே ஆக வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் கூறி உள்ளார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
3. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.
5. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.