கிரிக்கெட்

ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பும் வங்கதேச வீரர் + "||" + Mohammad Ashraful eyes Bangladesh return after five-year ban

ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பும் வங்கதேச வீரர்

ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பும் வங்கதேச வீரர்
உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தனக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு வங்காளதேச வீரர் முகம்மது அஷ்ரபுல் கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்புகிறார். #MohammadAshraful
டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் முகம்மது அஷ்ரபுல் கடந்த 2013 ஆம் ஆண்டு உள்ளூரில் நடைபெற்ற வங்கதேச ப்ரிமீயர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அஷ்ரபுல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மேலும் அஷ்ரபுலுக்கு 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் வங்காளதேச கிரிக்கெட் நிர்வாகக்குழு, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் அஷ்ரபுலிற்கான தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இதனிடையே வரும் 13-ஆம் தேதியுடன் அஷ்ரபுலிற்கான ஐந்தாண்டு கால தடை முடிவடையும் நிலையில், சர்வதேச போட்டிகளில் தான் விளையாடும் நாளை எதிர்நோக்கியுள்ளதாக முகம்மது அஷ்ரபுல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நீண்ட நாட்களாக ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு காத்திருக்கிறேன். கடந்த இரண்டு சீசன்களில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இனிமேல் நான் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது” எனக் கூறினார்.