கிரிக்கெட்

மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல் + "||" + Bad failure: Former players of the Indian team says

மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்

மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்
இந்திய அணியின் இந்த தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,

லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் இந்த தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய அணி மிகவும் மோசமான பார்மில் உள்ளது. நன்றாக ஆடாத நேரத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருப்போம் என்றாலும், எந்தவித போராட்டமும் இல்லாமல் இந்திய அணி தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. நம்பிக்கையுடனும், மன தைரியத்துடன் போராடி இந்திய அணி சரிவில் இருந்து மீளும் என்று நம்புவோம்’ என்று தெரிவித்துள்ளார்.


இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் தனது பதிவில், ‘இந்திய அணி சாதகமற்ற சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராட்டம் அளிக்காமல் சரண் அடைந்தது. இதில் இருந்து நமது அணியினர் விரைவில் பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த டெஸ்டில் சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் வீரர்கள் மஞ்ச்ரேக்கர், முகமது கைப் ஆகியோரும் இந்திய அணியின் தோல்வியை விமர்சித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி “ஹாட்ரிக் வெற்றி”
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றிபெற்று அசத்தியது. #INDvsWI
2. முதலாவது டி20 போட்டி: இந்திய அணி வெற்றி
முதலாவது டி20 போட்டியில் , வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
4. இறுதிப்போட்டியில் ஆட இந்திய அணி மறுத்ததா? - சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் ஹாக்கி பயிற்சியாளர்
இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆட மறுத்ததாக, பாகிஸ்தான் ஆக்கி பயிற்சியாளர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
5. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய அணி இன்று 2-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.