கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம் + "||" + Women's cricket match - starting today in Chennai

மகளிர் கிரிக்கெட் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

மகளிர் கிரிக்கெட் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
மகளிர் கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்க உள்ளன.
சென்னை,

ஐ.வி.எஸ்.இவென்ட்ஸ் சார்பில் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி அணிகளுக்கான லீக் கிரிக்கெட் போட்டி போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவா, எத்திராஜ் உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. லீக் ஆட்டங்கள் 16 ஓவர்களாகவும், இறுதிப்போட்டி 20 ஓவர்கள் கொண்டதாகவும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.