கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை + "||" + 20 Over cricket: Sri Lanka defeat South Africa

20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
கொழும்பு,

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி, சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் 98 ரன்களில் சுருண்டது. 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சன்டகன் 3 விக்கெட்டுகளும், அகிலா தனஞ்ஜெயா, டி சில்வா தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அடுத்து களம் கண்ட இலங்கை அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன்டிமால் 36 ரன்களும் (நாட்-அவுட்), டி சில்வா 31 ரன்களும் எடுத்தனர்.

இத்துடன் தென்ஆப்பிரிக்க அணியின் இலங்கை பயணம் முடிவுக்கு வந்தது. முன்னதாக டெஸ்ட் தொடரை இலங்கையும் (2-0), ஒரு நாள் தொடரை தென்ஆப்பிரிக்காவும் (3-2) கைப்பற்றின.


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட்: கோஸ்வாமி ஓய்வு
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2. இலங்கை-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
இலங்கை-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது.
3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி அபார வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
4. 20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆரோன் பிஞ்ச் முதலிடம் பிடித்தார்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலிடத்தை பிடித்தார்.