கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை 362 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா + "||" + India 194/2 At Lunch On Day 3 After Kohli, Pujara Fifties

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை 362 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:  உணவு இடைவேளை வரை 362 ரன்கள் முன்னிலையுடன்  வலுவான நிலையில் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை 362 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
நாட்டிங்காம்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 94.5 ஓவர்களில் 329 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து, துவக்கத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதும், ஹர்திக் பாண்ட்யா சூறாவளி பந்து வீச்சில் நிலைகுலைந்தது.   ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 128 ரன்னுக்குள் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

கடைசி கட்டத்தில் ஜோஸ் பட்லர், ஆண்டர்சனின் (1 ரன்) ஒத்துழைப்புடன் 150 ரன்களை கடக்க வைத்தார். அதிரடியாக ஆடிய பட்லர் 39 ரன்களில் (32 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.இங்கிலாந்து அணி  முதல் இன்னிங்சில் 38.2 ஓவர்களில் 161 ரன்களில் சுருண்டது. ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் இந்தியா 168 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 36 ரன்களிலும், ஷிகர் தவான் 44 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து இருந்தது.  இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் துவங்கியதும் புஜாராவும், விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. உணவு  இடைவேளை வரை இந்திய அணி 60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 362 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 56 ரன்களுடனும், விராட் கோலி 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3-வது டெஸ்டில் தற்போது இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நாளை நடக்கிறது.
2. கனடா பிரதமரும் வாழ்த்தினார்: தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து
தைப்பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டு பேசினார்.
3. மெல்போர்ன் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
மெல்போர்னில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 231 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
5. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை