கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகள் சென்னையில் பதிவு + "||" + New rules of the Indian Cricket Board are recorded in Chennai

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகள் சென்னையில் பதிவு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகள் சென்னையில் பதிவு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகள் சென்னையில் பதிவு செய்யப்பட்டது.
மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுடன் கூடிய புதிய விதிமுறைகளை 4 வார காலத்திற்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளரிடம் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று பதிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் 30 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கோர்ட்டு ஆணையிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.