கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு + "||" + Indian team for 4th and 5th Test against England announced;

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #BCCI #INDvsENG
மும்பை,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் தற்போது வரை விளையாடியுள்ளது. இதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் நிலையில், இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் ஷர்மா, சமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹனுவா விகாரி.இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 30 ஆம் தேதியும், 5-வது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதியும் துவங்குகின்றன.