கிரிக்கெட்

சிறுவனின் வேண்டுகோளை நிறைவேற்றிய விராட் கோலி + "||" + Indian cricket team Captain Virat Kohli takes a selfie with a child a

சிறுவனின் வேண்டுகோளை நிறைவேற்றிய விராட் கோலி

சிறுவனின் வேண்டுகோளை நிறைவேற்றிய   விராட் கோலி
இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, சிறுவனின் வேண்டுகோளை ஏற்று செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இங்கிலாந்து மண்ணில் சாதித்து காட்டியது. இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கோலி, அதைத்தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது சிறுவன் ஒருவன் விராட்...  விராட்...  என்று கத்தி தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். இதையடுத்து கோலி அவரது தந்தை வைத்திருந்த போனை வாங்கி செல்பி எடுத்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதே சமயம் இதே சுற்றுப்பயணத்தின் போது, கோலியை சந்திப்பதற்கு இங்கிலாந்து சிறுமி ஒருவர் வெகுநேரமாக காத்திருந்தார்.ஆனால் கோலி அவரை சந்திக்காததால், இந்திய வீரர் பும்ராவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பான புகைப்படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.