கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி மீண்டும் முதலிடம் + "||" + Captain Kohli overtakes Bradman and Ponting

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி மீண்டும் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி மீண்டும் முதலிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார். #ViratKohli #ICC
துபாய்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி 149, 51 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில், கோலி சரியாக பேட்டிங் செய்யாததையடுத்து, தரவரிசையில் மீண்டும் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால், நாட்டிங்ஹாமில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததையடுத்து, தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை விராட் கோலி எட்டிப்பிடித்துள்ளார்.

தற்போது 937 புள்ளிகள் பெற்று விராட் கோலி, முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன் 847 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும், டேவிட் வார்னர் 820 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் உள்ளனர்.