கிரிக்கெட்

சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியல்ல சேவாக் சொல்கிறார் + "||" + Not fair to compare Virat Kohli with Sachin Tendulkar yet Virender Sehwag

சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியல்ல சேவாக் சொல்கிறார்

சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியல்ல சேவாக் சொல்கிறார்
சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியாக இருக்காது என தெரிவித்துள்ள சேவாக், ஏன் என்ற காரணத்தையும் விளக்கியுள்ளார். #ViratKohli #VirenderSehwag #SachinTendulkar
மும்பை

சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்து வரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு (49 சதங்கள்) அடுத்து 35 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்தையும் சேர்த்து) அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 58 சதங்களுடன் 5ம் இடத்தில் உள்ளார்.

29 வயதான கோலி, இன்னும் 7 ஆண்டுகள் வரை கிரிக்கெட் ஆட வாய்ப்புள்ளது. எனவே சச்சினின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக வலம்வரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய  சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார்.

இந்நிலையில், சச்சினுடன் கோலி ஒப்பிடப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியல்ல என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்கள் போன்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடித்தால், சச்சினுடன் கோலியை ஒப்பிடுவதில் லாஜிக் இருக்கிறது. விராட் கோலி உள்பட ஒவ்வொரு வீரரும் சச்சினின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முயல்கின்றனர்.

இந்த மைல்கல்லை அடைய தேவையான திறமை மற்றும் வேட்கை கோலியிடம் உள்ளது.   அவர் தயாராகும்வழியைப் பார்த்தவுடன் அது தெளிவாகிறது. ஒவ்வொரு போட்டியிலும் முன்னர்  நடந்ததைப் பொருட்படுத்தாமல் அவர் கவனம் செலுத்துகிறார் என கூறினார்.